Home Featured நாடு சங்கப் பதிவகத்திற்கு ஜசெக 48 மணி நேரக் கெடு

சங்கப் பதிவகத்திற்கு ஜசெக 48 மணி நேரக் கெடு

1002
0
SHARE
Ad

gobind singh deo-கோலாலம்பூர் – ஜசெக 2013-இல் நடத்திய கட்சித் தேர்தல் செல்லாது என 4 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாது என அறிவித்துள்ள காரணத்தால் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள சங்கப் பதிவகம், இன்னும் தங்களுக்கு அந்த முடிவு குறித்த கடிதம் எதனையும் அனுப்பவில்லை என ஜசெக சட்டப் பிரிவுத் தலைவர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்திருக்கிறார்.

அதே வேளையில் சங்கப் பதிவகத்தின் முடிவை அறிவிக்கும் கடிதத்தை அடுத்த 48 மணி நேரத்திற்குள் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என கோபிந்த் சிங் நேற்று புதன்கிழமை விடுத்த அறிக்கை ஒன்றில் சங்கப் பதிவகத்திற்கு கெடு விதித்துள்ளார்.

நாளை வெள்ளிக்கிழமைக்குள் தங்களுக்கான கடிதத்தை சங்கப் பதிவகம் அனுப்பி வைக்காவிட்டால் வேறு வழியின்றி ஜசெக தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படும் எனவும் கோபிந்த் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.