Home அரசியல் சரவாக் ஊழல் பற்றிய ஒளிநாடாவிற்கு அன்வார் தான் காரணம் – தாயிப்

சரவாக் ஊழல் பற்றிய ஒளிநாடாவிற்கு அன்வார் தான் காரணம் – தாயிப்

512
0
SHARE
Ad

taibகோலாலம்பூர், மார்ச் 25 –  சரவாக் மாநில ஊழல் விவகாரம் பற்றி வெளியான  அந்த சர்ச்சைக்குரிய ஒளிநாடாவுக்கு எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் தான் காரணம் என்று அம்மாநில முதலமைச்சர் டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மாஹ்முட்(படம்) தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில்,

“அனைத்துலக அரசு சாரா அமைப்புக்களுடன் உள்ள வலுவான நட்பைப் பயன்படுத்தி, அன்வார் இப்ராஹிம் இது போன்ற ஒளிநாடாக்களை வெளியிட்டு சரவாக் மாநிலத்திற்கு களங்கம் ஏற்படுத்த முயன்று வருகிறார்.

#TamilSchoolmychoice

சரவாக் மாநிலத்தில் காடுகள் அழிக்கப்படுகின்றன என்று அந்த ஒளிநாடாவில் கூறியிருப்பது உண்மையல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே அன்வார் உண்மையில், சரவாக் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்று  நினைத்தால், அம்மாநிலத்தில் என்ன நிகழ்கிறது என்பதை அவர் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் சரவாக் மாநிலத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள இந்த களங்கத்தை நீக்க அவர் போராட வேண்டும். அப்போது தான் அவர் சரவாக் மக்களுக்கு நன்மை செய்வதாய் அர்த்தம்” என்று அப்துல் தாயிப் தெரிவித்துள்ளார்.