Home இந்தியா ஸ்டாலினுக்கு கமல் நன்றி!

ஸ்டாலினுக்கு கமல் நன்றி!

1021
0
SHARE
Ad

kamalaசென்னை – தனக்கு ஆதரவு தெரிவித்த எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவலில், “அன்புச் சகோதரர் ஸ்டாலின் அவர்கட்கு, நன்றி தவிர உடனே ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. என் ஆதங்கங்களில் பல உங்கள் கோபச் செய்தியிலும் கூட தென்பட்டதில் எனக்குப் பெரிய ஆறுதலே. ஒவ்வொரு வாக்காளனிலும் ஒரு தலைவன் இருக்கின்றான் என்பதை உணர மறுப்பவர் தலைவர்களாக நீடிக்கும் கனவு ஜனநாயகத்தில் பலிக்காது. பலிக்கவும் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கமல் குறித்துக் கூறுகையில், “தமிழக அரசு பற்றி நடிகர் கமல்ஹாசன் கூறியிருக்கும் கருத்து, தமிழக மக்களின் கருத்து. அதைத் தடுக்க அமைச்சர்கள் முயற்சி செய்யக் கூடாது. அது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் செயல்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.