
கோலாலம்பூர் – கடந்த ஐந்து ஆண்டுகளாக பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த எம்ஆர்டி எனப்படும் சுங்கைபூலோ-காஜாங் இடையிலான துரித இரயில் சேவையை இன்று திங்கட்கிழமை தொடக்கி வைத்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இந்த வரலாற்றுபூர்வ நிகழ்ச்சியில் மற்ற அமைச்சர்களுடன் இணைந்து எம்ஆர்டி இரயிலில் பயணம் செய்தார்.
நஜிப்புடன் அவரது துணைவியார் ரோஸ்மா மன்சோரும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டார்.
