Home நாடு சிறந்த எம்ஆர்டி சேவையை பக்காதானால் உருவாக்க முடியும்: நூருல்

சிறந்த எம்ஆர்டி சேவையை பக்காதானால் உருவாக்க முடியும்: நூருல்

1223
0
SHARE
Ad

Nurul izzah anwarஷா ஆலம் – பக்காத்தான் அதிகாரத்தில் இருந்தால், குறைந்த செலவில் பெரிய அளவிலான எம்ஆர்அடி சேவையை உருவாக்க முடியும் என்று பிகேஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வார் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற பேரணி ஒன்றில் பேசிய லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இசா, பக்காத்தான் ஹராப்பான் இன்னும் சிறப்பான போக்குவரத்து சேவைகளை உருவாக்க நினைப்பதாகத் தெரிவித்தார்.

“சுங்கை பூலோ மற்றும் காஜாங் இடையிலான தடத்திற்கு (எம்ஆர்டி) நன்றி” என்று பிரதமர் நஜிப் துன் ரசாக்கிற்கு நன்றி சொல்வது போல் நூருல் இசா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மேலும், “முன்னாள் பிரதமரையும், துணைப் பிரதமரையும் கொண்டிருக்கும் எங்கள் பக்காத்தான் ஹராப்பான், குறைந்த செலவில், மிகப் பெரிய எம்ஆர்டி சேவையை உருவாக்க முடியும் என்பதை நான் நஜிப் ரசாக்கிற்கு சொல்லிக் கொள்கிறேன்” என்று நூருல் கூறினார்.

51 கிலோமீட்டர் தொலைவிற்கு 21 பில்லியன் ரிங்கிட் செலவில் சுங்கை பூலோ – காஜாங் இடையிலான எம்ஆர்டி சேவையை பிரதமர் நஜிப் நேற்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.