Home நாடு மக்கள் விரும்பினால் அன்வாரைப் பிரதமராக ஏற்றுக் கொள்வேன்: மகாதீர்

மக்கள் விரும்பினால் அன்வாரைப் பிரதமராக ஏற்றுக் கொள்வேன்: மகாதீர்

735
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – அன்வார் தான் பிரதமராக வேண்டுமென மக்கள் விரும்பும் பட்சத்தில் அவரைப் பிரதமராக ஏற்றுக் கொள்ளத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

இன்று செவ்வாய்க்கிழமை பெர்டானா தலைமைத்துவ அறக்கட்டளையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகாதீர் பேசுகையில், “ஆமாம்.. மக்கள் விரும்பும் பட்சத்தில் (அன்வார் பிரதமராவது) ஏன் முடியாது” என்று தெரிவித்தார்.

அண்மையில் பிரிட்டிஷ் நாளிதழான ‘தி கார்டியன்’ வெளியிட்ட செய்தியில், அன்வாரைப் பிரதமர் வேட்பாளராக்க தான் பின்புலமாக இருப்பதை மகாதீர் மறுத்ததாகத் தெரிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

அன்வாரால் அடுத்த பிரதமராக வர முடியாது காரணம் அவர் முதலில் சிறையில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என்று மகாதீர் தெரிவித்திருந்ததாக ‘தி கார்டியன்’ கூறியிருந்தது.