Home கலை உலகம் பிக்பாஸ்: சர்ச்சையான சினேக(ன்) பார்வை!

பிக்பாஸ்: சர்ச்சையான சினேக(ன்) பார்வை!

878
0
SHARE
Ad

Bigbosssnehanசென்னை – பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று திங்கட்கிழமை, போட்டியாளர்கள் அனைவரும் ஆண்கள், பெண்கள் என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, போட்டி ஒன்று நடத்தப்பட்டது.

அதில் பெண்களில் ஒருவரையும், ஆண்களில் ஒருவரையும் தேர்ந்தெடுத்து மற்றவர்கள் ஒப்பனை செய்ய வேண்டும்.

அழகாக ஒப்பனை செய்யப்பட்ட அணிக்கு பிட்சா வழங்கப்படும் என பிக்பாஸ் உத்தரவிட்டார்.

#TamilSchoolmychoice

அதன் படி, பெண்கள் அணியில் ஜூலியும், ஆண்கள் அணியில் வையாபுரியும் ஒப்பனை செய்யப்பட்டு இருவரும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதில் என்ன சர்ச்சை என்கிறீர்களா? – ஜூலியை கவிஞர் சினேகன் பார்த்த பார்வை தான் இன்று ஃபேஸ்புக், டுவிட்டர் என நட்பு ஊடகங்கள் அனைத்திலும் பரபரப்பான பேச்சு.

அந்தப் பார்வை வழக்கமான பார்வையை விட சற்று வித்தியாசமாகத் தெரிய, அதற்கு ஒவ்வொருவரும் தனிப்பட்ட அர்த்தங்களைக் கற்பித்து வருகின்றனர்.

சினேகனை ‘அண்ணா’ என ஜூலி அழைத்து வந்தாலும் கூட, அவரது பார்வையில் தங்கை என்ற எண்ணம் இல்லையென பெண்கள் பலரும் சினேகனை இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய ரசிகர்கள் இன்று செவ்வாய்க்கிழமை இரவு அஸ்ட்ரோவில் இந்த எபிசோடைக் காணலாம்.