Home உலகம் 75 ஆண்டுகளுக்கு முன் மாயமான தம்பதியின் சடலம் மீட்பு!

75 ஆண்டுகளுக்கு முன் மாயமான தம்பதியின் சடலம் மீட்பு!

805
0
SHARE
Ad

Switcherlandcouple75yearsஜெனிவா – சுவிட்சர்லாந்தில் கடந்த 1942-ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், மெசிலின், பிரான்சின் என்ற தம்பதி கால்நடைகளை மேய்க்க மலைப்பகுதிக்குச் சென்ற போது காணமல் போயினர்.

எங்கு தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்காத நிலையில் அவர்களின் 7 குழந்தைகளும் அனாதை இல்லங்களில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், 75 ஆண்டுகளுக்குப் பிறகு சமீபத்தில் அவர்கள் மாயமான மலைப்பகுதியில் பனிப்பாறைகளின் அடியில் அவர்கள் இருவரின் சடலமும் மீட்கப்பட்டிருக்கின்றது.

#TamilSchoolmychoice

இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்டிருந்த உடைகளும், பொருட்களும் அவர்களுக்கு அருகில் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

தற்போது, அவ்வுடல்களைக் கைப்பற்றியிருக்கும் காவல்துறையினர், மரபணு சோதனைக்கு அனுப்பியிருக்கின்றனர்.