புதுடெல்லி – பலமுறை விசாரணைக்கு வரும் படி உத்தரவிட்டும் கூட, சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக், வராத காரணத்தால், அவரது கடப்பிதழை முடக்கியது இந்திய அரசு.
தேசிய விசாரணை முகமையின் வேண்டுகோளின் படி, இந்திய வெளியுறவு அமைச்சு, இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது.
தீவிரவாதத்திற்கு ஆதரவாக நிதியுதவி செய்தது, சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும் கருத்தை வெளியிட்டது போன்ற குற்றச்சாட்டுகள் ஜாகிர் நாயக் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன.
கனடா, பிரிட்டன் எனப் பல நாடுகள் ஜாகிர் நாயக்கிற்கு தடை விதித்தாலும் கூட, மலேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் ஜாகிர் நாயக்கை வரவேற்கின்றன.
தற்போது மலேசியாவில் ஜாகிர் நாயக் நிரந்தர வசிப்பிட உரிமம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.