Home கலை உலகம் ‘எலும்பு வல்லுநர் எச்.ராஜா’ – கமல் கிண்டல் பதிலடி!

‘எலும்பு வல்லுநர் எச்.ராஜா’ – கமல் கிண்டல் பதிலடி!

1104
0
SHARE
Ad

Kamalசென்னை – கடந்த செவ்வாய்க்கிழமை நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்திருந்த கவிதை அவர் அரசியலுக்கு வருவது போலான தோற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கமல் அரசியலுக்கு வருவது குறித்து அமைச்சர் ஜெயக்குமார், எச்.ராஜா, தமிழிசை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

அவர்களில் எச்.ராஜா கமலை முதுகெலும்பில்லாதவர் என்று விமர்சித்தார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், நேற்று புதன்கிழமை இரவு கமல் தனது டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், அரசியலுக்கு வா என அறைக்கூவல் விடும் தம்பி மாண்புமிகு ஜெயக்குமாரோ அல்லது எலும்பு வல்லுநர் தம்பி எச்.ராஜாவோ நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணரவில்லை என்று கமல் தெரிவித்திருக்கிறார்.

மேலும், தமிழகத்தில் நடக்கும் அனைத்துத் துறைகளிலும் உள்ள ஊழல் குறித்து http://www.tn.gov.in/ministerslist என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கமல் தனது ஆதரவாளர்களை வலியுறுத்தியிருக்கிறார்.

கமல் வெளியிட்டிருக்கும் முழு அறிக்கை பின்வருமாறு:-

kamal19191_vc2_20539