Home Featured இந்தியா புதிய இந்திய அதிபர் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்படுகிறார்!

புதிய இந்திய அதிபர் வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்படுகிறார்!

1535
0
SHARE
Ad

meira-kumar-ram-nath-kovind-comboபுதுடில்லி – புதிய இந்திய அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது இன்று வியாழக்கிழமை மாலைக்குள் தெரிந்துவிடும்.

கடந்த திங்கட்கிழமை ஜூலை 17-ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி சார்பில் மீராகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.

இன்று வியாழக்கிழமை இந்திய நேரப்படி காலை 11.00 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. மாலை 5.00 மணிக்குள் முடிவுகள் தெரிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

ராம் நாத் கோவிந்த் அடுத்த புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.