Home கலை உலகம் டி.எச்.ஆர் ராகாவின் ‘சீரியல்’ பேய் 2.0 – ஜூலை 31 முதல்!

டி.எச்.ஆர் ராகாவின் ‘சீரியல்’ பேய் 2.0 – ஜூலை 31 முதல்!

997
0
SHARE
Ad

Serialpei2.0கோலாலம்பூர் – வானொலி வாயிலாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது மட்டுமின்றி தங்களின் நடிப்புத் திறனை ‘சீரியல் பேய்’ நாடகத்தில் வெளிக்காட்டி ரசிகர்களின் பாராட்டும் ஆதரவும் பெற்ற டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் மீண்டும் ‘சீரியல் பேய் 2.0’ நாடகத்தில் கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மிகச் சிறப்பாகவே நடித்துள்ளனர்.

மர்மம், திகில், நகைச்சுவை என அனைத்து அம்சங்களும் கலந்து ‘சீரியல் பேய் 2.0’ நாடகம் எதிர்வரும் ஜூலை 31-ம் தேதி முதல் ராகாவின் முகநூல் மற்றும் யூடியுப் தளத்தில் இடம்பெறவிருக்கிறது.

இன்றைய டிஜிட்டல் உருமாற்றத்தைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு 11 அத்தியாயங்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘சீரியல் பேய்’ நாடகத்தின் காணொளிகள் முகநூல் மற்றும் யூடியுப் வாயிலாக 10 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களை சென்றடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

Serial Pei 1இந்நாடகத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த மகத்தான ஆதரவுக்கு இம்முறை 15 அத்தியாயங்களுடன் ‘சீரியல் பேய் 2.0 நாடகம்’ நட்பு ஊடகங்களில் வலம் வரவிருக்கின்றது.

மீண்டும் ராணி சுந்தரராஜூ இயக்கத்தில் இந்நாடகத்தில் ராகாவின் அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், கவிமாறன், கீதா, அகிலா, ஷாலு,ஜெய், யாசினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் டி.எச்.ஆர் ராகாவின் ‘நடிக்க வரலாம் வா’ எனும் போட்டியின் வெற்றியாளராகத் தேர்தெடுக்கப்பட்ட விஷாந்தினி ஜெகதீசன் மற்றும் சுபாஷினி சங்கரன் நடித்திருக்கிறார்கள்.

இந்நாடகத்தின் முன்னோட்டம் டி.எச்.ஆர் ராகாவின் அதிகாரப்பூர்வ முகநூலில் ஜூலை 26-ம் தேதி வெளியிடப்பட்டது. இதுவரை 30,000-க்கும் மேற்பட்டவர்கள் கண்டுகளித்திருக்கிறார்கள்.

திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை டி.எச்.ஆர் ராகாவின் முகநூல் மற்றும் யூடியுபில் வெளியிடப்படும் இந்நாடகம் நட்பு ஊடகங்களில் மட்டுமின்றி வானவில் அலைவரிசையிலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒளிபரப்பப்படும்.

அதே வேளையில், ரசிகர்கள் இந்நாடகத்தைக் கண்டு களித்து ராகாவின் அறிவிப்பாளர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான விடையளித்து 300 ரிங்கிட் வெல்லும் வாய்ப்பும் காத்துக் கொண்டிருக்கின்றது.

மேல் விவரங்களுக்கு raaga.fm அகப்பக்கத்தை அல்லது முகநூலை நாடுங்கள்.