கோலாலம்பூர் – தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் கற்றல் கற்பித்தல் தமிழ் மொழியில் மட்டுமே இருப்பதை நிலைநிறுத்தவும், இருமொழி பாடத்திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளில் நடைமுறை படுத்துவதை மறுத்தும் தேசிய அளவிலான கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் கீழ்க்காணும் வகையில் நடைபெறவிருக்கிறது:
தேதி: 29.07.2017 (சனிக்கிழமை)
நேரம்: 9.30 காலை
இடம்: நியூப் மண்டபம், பிரிக்பீல்ட்ஸ் (NUBE HALL, BRICKFIELDS)
தமிழ்ப்பள்ளிகளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களின் கற்றல் கற்பித்தல் தமிழ் மொழியில் இருப்பதை உறுதி செய்வதோடு தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற பொருந்தாத திட்டமான இருமொழி பாடத்திட்டம் தமிழ் பள்ளிகளில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவும் ஒத்த சிந்தனையாளர்களின் கருத்தை பதிவு செய்யவும் தேசிய அளவிலான இந்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது:
இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டு, அளவையாடி, கருத்துகளைப் பதிய வைக்க இந்திய இயக்கங்களின் பிரதிநிதிகளுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் இருமொழி பாடத்திட்டம் சம்பந்தப்பட்ட ஐயங்களையும் தமிழ் வழி கல்வியின் மீது அதன் நேர்மறையான தாக்கங்களையும் உள்வாங்கிக் கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில் கருத்துகளைப் பதிவு செய்வதோடு அடுத்த நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளும் அலசப்படும்.
மேலும், மலேசியாவில் 200 ஆண்டுகளைக் கடந்து வந்துள்ள தமிழ்வழிக்கல்வியை வலுப்படுத்தவும் தொடர்ந்து நிலைக்கச் செய்யவும், இந்த நிகழ்ச்சியில் பதியப்படும் கருத்துகளும், நிறைவேற்றப்படும் தீர்மானங்களும் முக்கிய பங்கு வகிக்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்புகின்றனர்.
எனவே, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை வழங்க விரும்புபவர்கள் கீழ்க்காணும் தங்களது வருகையை பின்வரும் அலைபேசி எண்களின் மூலம் உறுதி செய்யுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்:
016 948 9218; 013 632 0587; & 012 434 1474.
“தமிழ்ப்பணியாற்ற வாருங்கள், வரலாற்றில் இடம் பெறுங்கள்”