இஸ்லாமாபாத் – பாகிஸ்தானின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை இடைக்காலப் பிரதமராக பெட்ரோலியம் மற்றும் இயற்கை வள அமைச்சர் ஷாஹிட் காகான் அப்பாசி (படம்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பதவி விலகும் நவாஸ் ஷெரிப் இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
அடுத்த 45 நாட்களுக்கு ஷாஹிட் இடைக்காலப் பிரதமராகப் பதவி வகிப்பார். இதற்கிடையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ஷெபாஸ் ஷெரிப் நாட்டின் தேசிய நாடாளுமன்றத்திற்குப் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்படும்வரை ஷாஹிட் பிரதமராகப் பதவி வகிப்பார்.
பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரிப் விலகியுள்ளதைத் தொடர்ந்து அடுத்த பிரதமராக அவரது சகோதரர் ஷெபாஸ் ஷெரிப் (படம்) பிரதமராகப் பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.