Home நாடு மகாதீர் உடல் நலக் குறைவு – பக்காத்தான் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை

மகாதீர் உடல் நலக் குறைவு – பக்காத்தான் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை

858
0
SHARE
Ad

Mahathirகோலாலம்பூர் – 90 வயதைத் தாண்டிய நிலையிலும், மலேசியாவின் இளைய அரசியல்வாதிகளுக்கு சரிசமமான போட்டியை வழங்குகிறார் என யார் கண் பட்டதோ தெரியவில்லை, கடந்த சில நாட்களாக துன் மகாதீர் பக்காத்தான் ஹரப்பானின் பிரச்சாரக் கூட்டங்களில் காணப்படவில்லை.

ஜோகூர் மாநிலத்தின் குளுவாங்கிலும், பகாங் மாநிலத்தின் தெமர்லோவிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பக்காத்தான் ஹரப்பான் பிரச்சாரக் கூட்டங்களில் அறிவிக்கப்பட்டபடி துன் மகாதீர் கலந்து கொள்ளவில்லை.

விசாரித்ததில் அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் அதன் காரணமாக ஒப்புக் கொள்ளப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் என்றும் மலேசியாகினி செய்தித் தளம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

நீண்ட தூரம் பயணம் செய்து பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு மருத்துவர்கள் அவருக்கு ஆலோசனை கூறியிருப்பதாகத் தெரிகிறது.கடந்த ஒரு வாரமாக சளிக் காய்ச்சலால் மகாதீர் அவதிப்பட்டு வருகிறார்.

இருப்பினும் மகாதீருக்குப் பதிலாக அவரது மகனும் பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவருமான முக்ரிஸ் மகாதீர், ஏற்கனவே மகாதீர் கலந்து கொள்வதாக ஒப்புக் கொண்ட கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

மகாதீர் கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், அவரது உரை காணொளிப் பதிவாக பக்காத்தான் ஹரப்பான் பிரச்சாரக் கூட்டங்களில் ஒளிபரப்பப்படுகிறது.