Home Featured நாடு 3 மில்லியன் பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை: நஜிப்

3 மில்லியன் பேர் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை: நஜிப்

1847
0
SHARE
Ad

Najib-கோலாலம்பூர் – 3 மில்லியன் மலேசியர்கள் இன்னும் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் இன்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் மார்ச் 2017 வரையிலான கணக்கெடுப்பின் படி, வாக்களிக்கத் தகுதி இருந்தும் கூட, இன்னும் 3,772,149 மலேசியர்கள் வாக்காளர்களாகப் பதிவு செய்யவில்லை என்பதை நாடாளுமன்றத்தில் இன்று நஜிப் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மேலும் ஜனவரி 2017 முதல் மார்ச் 2017 வரை கணக்கெடுப்பின் படி, வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு 1,457 பேர் ஆட்சேபணை தெரிவித்திருப்பதையும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice