Home நாடு கிள்ளானில் 30 மணி நேரம் நீர் விநியோக நிறுத்தம்!

கிள்ளானில் 30 மணி நேரம் நீர் விநியோக நிறுத்தம்!

983
0
SHARE
Ad

syabasகோலாலம்பூர் – கிள்ளானில் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி, காலை 8 மணியளவில் தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி மதியம் 2 மணி வரை, சுமார் 30 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவிருப்பதாக ஷியாபாஸ் (SYARIKAT Bekalan Air Selangor) அறிவித்திருக்கிறது.

மேப்பில்ட்ரீ நிறுவனம் அருகே செல்லும் நீர் விநியோக குழாய்களில் சில கருவிகளை மாற்ற விருப்பதால், கிள்ளானின் முக்கிய பகுதிகளில் இந்த நீர் விநியோகத் தடை ஏற்படும் என்றும் ஷியாபாஸ் குறிப்பிட்டிருக்கிறது.