Home கலை உலகம் ‘மாமா மச்சான்’ – முதல்நாள் வசூல் முழுவதும் பிரிஷாவின் மருத்துவச் செலவிற்கு!

‘மாமா மச்சான்’ – முதல்நாள் வசூல் முழுவதும் பிரிஷாவின் மருத்துவச் செலவிற்கு!

1367
0
SHARE
Ad

Maama Machanகோலாலம்பூர் – பாஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆர்எம்எஸ் சரா இயக்கியிருக்கும், ‘மாமா மச்சான்’ என்ற மலேசியத் திரைப்படம் இன்று ஆகஸ்ட் 3-ம் தேதி நாடெங்கிலும் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

இந்நிலையில், ‘மாமா மச்சான்’ படக்குழுவினர், அண்மையில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டனர். அதாவது இன்று முதல் நாள் 18 திரையரங்குகளில் வெளியாகும் 90 காட்சிகளின் மொத்த வசூலையும், நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்காகக் காத்திருக்கும் பிரிஷா சந்திரன் என்ற குழந்தையின் மருத்துவச் சிகிச்சைக்கு அளிப்பதாகத் தெரிவித்தனர்.

இது மலேசியக் கலைத்துறையினரை மட்டுமின்றி, பொதுமக்களையும் மிகவும் மகிழ்ச்சிபடுத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

பல கஷ்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்படும் மலேசியத் திரைப்படங்கள் திரைக்கு வருவதே பெரிய சவாலாக இருக்கும் நிலையில், இன்று முதல் நாள் வசூல் முழுவதையும் குழந்தையின் மருத்துவச் செலவிற்காக அளிக்க முன்வந்திருக்கும் ‘மாமா மச்சான்’ திரைப்படக் குழுவினருக்கு பொதுமக்கள் பலர் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

20604178_1476659462382373_6091841673331403385_nஎனவே, இன்று 18 திரையரங்குகளில் வெளியாகும் ‘மாமா மச்சான்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரிங்கிட்டும், குழந்தை பிரிஷாவின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவி, அக்குழந்தையை நலம் பெறச் செய்யும் என்பதால் மலேசியத் திரைப்பட ரசிகர்கள் தவறாமல் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று திரைப்படக் குழுவினர் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

இத்திரைப்படத்தில் நடிகர் பென்ஜி, நடிகை கல்பனாஸ்ரீ,  நடிகர் ஜெகா உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.