Home நாடு ‘ரசாக் பாகிண்டா குறிப்பிடப்பட்டார்’ – பிரான்ஸ் வழக்கறிஞர் உறுதி!

‘ரசாக் பாகிண்டா குறிப்பிடப்பட்டார்’ – பிரான்ஸ் வழக்கறிஞர் உறுதி!

666
0
SHARE
Ad

RAZAK_BAGINDA_கோலாலம்பூர் – மலேசியாவிற்கு ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் விற்றதில் ஊழல் இருப்பதாக நம்பப்படும் வழக்கு பாரிசில் நடந்து வருகின்றது.

அவ்வழக்கில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் நெருங்கிய உதவியாளரான அப்துல் ரசாக் பஜிண்டா, சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை 18-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையில், அப்துல் ரசாக்கின் பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டதை பிரான்சைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரான வில்லியன் போர்டன் உறுதிப்படுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

“பெருநிறுவன சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாக கடந்த ஜூலை 18-ல் நடைபெற்ற வழக்கு விசாரணையில் அப்துல் ரசாக் சுட்டிக் காட்டப்பட்டார்” என்று போர்டன் கூறியதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டிருக்கிறது.

மங்கோலிய அழகி அல்தான்துன்யா கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு விடுதலை செய்யப்பட்டவருமான ரசாக் பகிண்டா (படம்) ஸ்கார்ப்பியன் நீர்மூழ்கிக் கப்பல் மலேசியாவுக்கு வாங்கப்பட்ட வழக்கில் பிரான்சில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக அனைத்துல ஊடகங்கள் அண்மையில் செய்திகள் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.