Home நாடு மலாய்க்காரர்கள் முட்டாள்கள் அல்ல நஜிப் – மகாதீர் சாடல்!

மலாய்க்காரர்கள் முட்டாள்கள் அல்ல நஜிப் – மகாதீர் சாடல்!

703
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – பணம் கொடுப்பதால் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் வராத நிதியைப் பற்றி மலாய்க்காரர்கள் மறந்துவிடுவார்கள் என நினைக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்திருக்கிறார்.

“மலாய்க்காரர்கள் முட்டாள்கள் என்று நஜிப் நினைக்கிறார். (அவர்) மலாய்க்காரர்களுக்கு நேரடியாகப் பணம் கொடுத்து, அவர்கள் 600 மில்லியன் டாலர் நிதி கொடுத்து கேள்விக் கேட்கவிடாமல் செய்யலாம் என நினைக்கிறார்.”

“ஆனால் மலாய்க்காரர்கள் நஜிப் நினைப்பது போல் முட்டாள்கள் அல்ல. அவர்கள் தெரியும் மாயமான நிதி அவர்களுக்குச் சொந்தமானது என்று தெரியும்” என்று மகாதீர் தனது வலைப்பூவில் குறிப்பிட்டிருக்கிறார்.