Home நாடு தித்தியான் டிஜிட்டல்: பேராக் தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி!

தித்தியான் டிஜிட்டல்: பேராக் தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டி!

1156
0
SHARE
Ad

Perak03
கோலாலம்பூர் – கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் கடந்த 33 ஆண்டுகளாக சமுதாய நலன் கருதி பயன்மிக்கத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. இவ்வியக்கத் திட்டங்களில் ஒன்றானது தித்தியான் டிஜிட்டல் திட்டமாகும்.

இத்திட்டமானது கடந்த 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 9 வருடங்களாக செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டம், தமிழ்ப்பள்ளி மாணவர்கள் உலகமய மாறுதலுக்கேற்ப தகவல் தொடர்புத் திறனறிவை (ICT) பெற்றிருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு சீரிய முறையில் செயல்வடிவம் காணப்பெற்று வருகின்றது.

புறநகர், நகர்புற மாணவர்களிடையே அமையப்பெற்ற தகவல் தொடர்புத் திறனறிவை (ICT இடைவெளியை குறைக்க இத்திட்டம் பெரும் பங்காற்றி வருகின்றது. தித்தியான் டிஜிட்டல் திட்டம் அமைக்கப்பட்டதன் வழி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சுற்று வட்டார பொது மக்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் இருக்கிறது
தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப போட்டியினை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் (HYO Port Klang), மலேசிய சமுக  கல்வி அறவாரியமும் (MCEF), மலேசிய உத்தமம் அமைப்பும் (INFITT Malaysia) இணைந்து இப்போட்டியை வழிநடத்துகிறது.

இந்நிலையில், பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்ப புதிர்ப் போட்டி, கடந்த 29-07-2017 (சனிக்கிழமை) அரசினர் தமிழ்ப்பள்ளி தமிழ்ப்பள்ளி, பேராக் தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு பிரமுகராக அரசினர் தமிழ்ப்பள்ளியின் மேலாளர் வாரிய குழு தலைவர் பெ. ஏகாம்பரம் கலந்துக் கொண்டு, மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கினார். அவர் தம் உரையில், இவ்வகையான போட்டிகளில் அதிகமான தமிழ்ப்பள்ளிகளை கலந்துக் கொண்டு மேன்மேலும் நன்மை அடைய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பத்தின் அவசியத்தையும், காலத்தின் கட்டாயத்தையும் விவரித்துக் கூறினார். தொடர்ந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சமூதாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் சிறந்த தொரு பணியை செய்து வரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்திற்க்கும், தித்தியான் டிஜிட்டல் திட்டத்திற்க்கும் தனது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார். மேலும் எதிர்காலத்தில் தொழில்துறையில் தொழிநுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றார்.

பேராக் மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில் நுட்ப புதிர்ப் போட்டியில் வெற்றிப்  பெற்ற பள்ளிகள்:

Perak State ICT Quiz competition 2017 & Qualified for National level ICT Competition 2017
1st: SJKT Keruh
2nd: SJKT St Theresa Covent
3nd: SJKT St Theresa convent
4th: SJKT Maha Ganesa Viddyasalai
5th: SJKT Tun Sambanthan
6th: SJKT Kerajaan
7th: SJKT Barathi
8th: SJKT Tun Sambanthan
9th: SJKT Bidor Tahan
10th: SJKT Mahathma Gandhi Kalasalai
11th: SJKT Changkat Salak
12th: SJKT Klebang
13th: SJKT Mahathma Gandhi Kalasalai
14th: SJKT Khir Johari
15th: SJKT Chettiars

* மாநில அளவிலான போட்டியில் வெற்றிப்பெற்ற முதல் 15 நிலை வெற்றியாளர்கள்,
தேசிய ரீதியிலான போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.