Home உலகம் 2018 தேர்தலை எதிர்நோக்கி அமைச்சரவை அமைத்தார் சாஹித் கான்!

2018 தேர்தலை எதிர்நோக்கி அமைச்சரவை அமைத்தார் சாஹித் கான்!

781
0
SHARE
Ad

Pakistan prime ministerஇஸ்லாமாபாத் – நவாஸ் ஷரிப் பதவி விலகிய பின்பு பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் சாஹித் கான் அப்பாசி, வரும் 2018-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப தனது தலைமையிலான அமைச்சரவையை அமைத்திருக்கிறார்.

இஷாக் தர் மீண்டும் நிதியமைச்சராகவும், ஷரிப் அலி, காவாஜா ஆசிப் வெளியுறவு மற்றும் தற்காப்பு அமைச்சில் பொறுப்பு வகிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

47 உறுப்பினர்களைக் கொண்ட சாஹித் கானின் அமைச்சரவை உறுப்பினர்களும் புனித குரான் நூலை வாசித்து பதவி ஏற்றுக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

இதனிடையே, சாஹித் கானின் இந்த புதிய அமைச்சரவை, வரும் 2018-ல் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.