Home கலை உலகம் அஸ்ட்ரோ: ‘கண்ணாடி’ – இன்னல்களின் பிரதிபலிப்பு!

அஸ்ட்ரோ: ‘கண்ணாடி’ – இன்னல்களின் பிரதிபலிப்பு!

1249
0
SHARE
Ad

Kannadi - Astroகோலாலம்பூர் – பணக் கஷ்டம், மனக் கஷ்டம், நோய் என நம்மில் பலருக்கு இன்னும் கஷ்டமே வாழ்க்கையாக அமைகின்றது. சுமையை இறக்கி வைக்கும் நேரம் எப்போ வருமோ? என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு பயணத்தையும் கடக்கும் உள்ளங்களுக்கு எவ்வாறு ஆறுதல் சொல்வது? ஆனால், அந்த உள்ளங்களுக்கு ஆறுதலாக இருப்பது வேறும் கண்ணீர் மட்டுமே.

இது போன்ற சூழ்நிலைகளில் இருப்பவர்களுக்கு நம்மால் முடிந்த வரை உதவ வேண்டும் என்ற சமூக சிந்தனையோடு அஸ்ட்ரோ வானவில் “கண்ணாடி” நிகழ்ச்சியை, கடந்த 2011-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதுவரை 72-க்கும் மேற்பட்ட குடும்பங்களின்  வாழ்க்கை கதைகள்  இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.

Kannadi1-Astroசுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை என்பார்கள். விளக்கு அனைந்த பின் இருட்டைக் கண்டு கலங்குவதை விட, இரு கரம் அணைத்து அந்த விளக்கிலிருந்து ஒளிபரவச் செய்வது சாலச் சிறந்தது. அவ்வகையில் ஏழாவது சீசன் எட்டியுள்ள இந்நிகழ்ச்சி இன்னும் 12 குடும்பங்களின் வாழ்கையைக் கதையைக் கொண்டு வரவுள்ளது.

#TamilSchoolmychoice

அவ்வகையில் இன்று 4-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு ஒளியேறவுள்ள முதல் அத்தியாயத்தில் கெடா மாநிலத்திலுள்ள சுங்கை பட்டாணியைச் சேர்ந்த கோகிலவாணி குடும்பத்தின்  கதையாகும்.

ஒரு சாலை விபத்தில் சிக்கி கோகிலவாணி கணவரின் உடல் பக்கவாதத்தால் முடங்கிவிட்டது. இவரின் மூன்று குழந்தைகள் தற்போது ஆரம்பப் பள்ளியில் பயின்று வருகின்றார்கள். ஒரு சந்தையில் வேலைச் செய்யும் கோகிலவாணிக்கு, ஒவ்வொரு நாளுக்கும் வெறும் 30 ரிங்கிட் மட்டுமே வருமானமாகும்.

வீட்டு வாடகை, குழந்தைகளுக்குப் பள்ளி பேருந்து கட்டணம் என பல சுமைகளுடன் வாழ்க்கையைக் கடந்து வருகின்றார். சில நேரங்களில் பக்கவாதத்திலுள்ள தன்னுடைய கணவரை கவனிக்க வேண்டிய சூழ்நிலையில் வேலைக்குச் செல்ல முடியாத நிலையும் அவ்வப்போது ஏற்படுகின்றது.

Kannadi2-Astroநம் இந்திய சமுதாயத்தில் நம்முடன் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு வேண்டிய உதவியை நல்கும் நோக்கில் ஒளிபரப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் வரும் குடும்பங்களுக்கு நீங்களும் உதவி செய்ய விரும்புகிறீர்களா?

அப்படி என்றால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை இரவு மணி 10 மணிக்கு அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-இல் மற்றும் அஸ்ட்ரோ கோ-வில் ஒளிப்பரப்பாகும் கண்ணாடி நிகழ்ச்சியை மறவாமல் பாருங்கள். அவ்வாறு உதவு முன் வரும் கரங்கள் secretariat.nawem@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.