Home நாடு ஐஜிபி-க்கு எதிராக அஸ்மின் வழக்கு!

ஐஜிபி-க்கு எதிராக அஸ்மின் வழக்கு!

876
0
SHARE
Ad

Azmin-Ali-igpகோலாலம்பூர் – சர்ச்சையில் சிக்கியிருக்கும் தொழிலதிபர் லோ தாயிக் ஜோவை, தங்களிடம் ஒப்படைக்க மறுக்கும் தேசிய காவல்படைத் தலைவருக்கு எதிராக சிலாங்கூர் மந்திரி பெசார் மொகமட் அஸ்மின் அலி வழக்குத் தொடரவிருக்கிறார்.

காலிட்டுக்குக் கொடுக்கப்பட்ட 14 நாட்கள் நோட்டீஸ் நிறைவடைந்துவிட்டதால் இனி அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என அஸ்மினின் வழக்கறிஞரான லத்தீபா கோயா தெரிவித்திருக்கிறார்.

“எங்களுடைய கட்சிக்காரர், மாண்புமிகு டத்தோஸ்ரீ அஸ்மின் அலி, ஐஜிபி-க்கு சட்டப்பூர்வக் கடமையைச் செய்ய ஒரு வாய்ப்பு அளித்தார். ஆனால் ஜோ லோ-வை அவர் விசாரணை அழைத்துவரவில்லை. அதோடு, அவருக்கு அதில் ஆர்வமும் இல்லை. எனவே அவரை நீதிமன்றத்தில் சந்திக்கிறோம்” என்று லத்தீபா தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice