Home நாடு ‘மகாதீருடன் நான் பேசியவை பதிவாகியிருக்கின்றன’ – சாஹிட் விளக்கம்!

‘மகாதீருடன் நான் பேசியவை பதிவாகியிருக்கின்றன’ – சாஹிட் விளக்கம்!

776
0
SHARE
Ad

mahathir-zahid-comboகோலாலம்பூர் – பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை பதவியிலிருந்து கவிழ்க்க, துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹமீடி தன்னை வந்து சந்தித்ததாக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அண்மையில் குற்றம் சாட்டினார்.

இந்நிலையில், அதற்குப் பதிலளித்திருக்கும் சாஹிட், மகாதீருடன் நடத்திய பேச்சுவார்த்தையை தானும் பதிவு செய்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மகாதீரிடமும் அந்தப் பேச்சுவார்த்தைக்கான நகல் இருக்கும் என்றும் சாஹிட் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், அச்சந்திப்பு தான் துணைப் பிரதமராகப் பதவியேற்ற 10 நாட்களில் நடைபெற்றதாகவும், நஜிப்பின் ஆசியுடன் தான் அச்சந்திப்பிற்குத் தான் சென்றதாகவும் சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.

“அந்தத் தலைவர், தான் எதிர்கட்சித் தலைவர்கள், அந்த நேரத்தில் பதவியை இழந்த சில அம்னோ தலைவர்களிடம், நஜிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு  வர மகாதீர் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தார். இது தான் அந்தப் பதிவில் இருக்கிறது. இதைத் தான் அந்தத் தலைவரும் சொல்கிறார்” என்று சாஹிட் தெரிவித்திருக்கிறார்.