Home கலை உலகம் ‘நீரில் மூழ்கிய ஓவியா’ – இரக்கமின்றி படம் பிடித்த விஜய் டிவி!

‘நீரில் மூழ்கிய ஓவியா’ – இரக்கமின்றி படம் பிடித்த விஜய் டிவி!

1540
0
SHARE
Ad

Oviyabigbossசென்னை – பிக்பாஸ் வீட்டில் இன்று வெள்ளிக்கிழமை ஓவியா விவகாரம் உச்சத்தை எட்டிவிட்டது.

கடந்த சில நாட்களாகவே ஆரவ் காதல் முறிவால் மனமுடைந்து போயிருந்த ஓவியா, முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவது, எதையோ கற்பனை செய்து கொண்டு பேசுவது என அவரது நடவடிக்கைகள் மாறத் தொடங்கின.

அதற்கேற்ப மற்ற ஹவுஸ்மேட்சுகளும் (சினேகன், வையாபுரியைத் தவிர) ஓவியாவுக்கு மனநலம் பாதிக்கப்பட்டுவிட்டதாக மனதளவில் குதூகலத்துடன் வார்த்தைகளில் சோகத்துடன் நன்றாகவே நடித்தார்கள்.

#TamilSchoolmychoice

அவர்களுடன், பிரச்சினைக்குக் காரணமான ஆரவ்வும் சேர்ந்து கொண்டது தான் ஓவியாவிற்கு இன்னும் கூடுதல் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், 40-ம் நாள், இரவு 8 மணியளவில், திடீரென ஓவியா நீச்சல் குளத்தில் மூழ்கியபடி இருந்தார். அது மனஉளைச்சலால் ஏற்பட்ட தற்கொலை முயற்சியா? என்பது உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் நீச்சல் குளத்தில் தன்னைத் தானே மூழ்கடித்துக் கொண்டிருந்தார்.

என்ன அதிர்ச்சி என்றால்? கேமரா அதை சத்தமின்றி படம் பிடித்துக் கொண்டிருந்தது தான். ஆரவ் பார்த்துவிட்டு கத்திய பின்னர் தான் மற்ற அனைவரும் ஓடிச் சென்று தூக்கினார்கள். இல்லையென்றால் உண்மையில் என்ன ஆகியிருக்குமோ?

இது உண்மையில் நடக்கும் நிகழ்ச்சியா? அல்லது திரைக்கதையாக எழுதப்பட்டிருக்கிறதா? என்ற மிகப் பெரிய சந்தேகம் தற்போது பெரும்பாலானவர்களுக்கு எழுந்து விட்டது.

சரி.. இது உண்மையில் ரியாலிட்டி ‌ஷோவாக இருக்கும் பட்சத்தில், இரவு 8 மணிக்கு நிச்சயமாக கேமராவை இயக்க ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் ஓவியா மூழ்குவதைப் பார்த்திருப்பார்கள். ஏற்கனவே அவர் மன உளைச்சலில் இருப்பதும் பிக்பாசிற்கு நன்கு தெரியும். பின் எப்படி ஓவியா அப்படி ஒரு காரியம் செய்யும் போது பிக்பாஸ் குரல் கொடுத்து ஹவுஸ்மேட்சுகளை எச்சரிக்கைவில்லை? மாறாக வேடிக்கை பார்ப்பது எதற்காக குளத்தில் விழுந்து செத்தாலும் டிஆர்பி-யை இன்னும் அதிகரித்து காசு பார்க்கவா?

திரைக்கதையாக இருக்கும் பட்சத்தில், ஒட்டுமொத்த பிக்பாஸ் கூட்டத்தின் வண்டவாளமும் மிக விரைவில் தண்டவாளம் ஏறிவிடும். காரணம் பிக்பாஸ் போட்ட கணக்கு ஓவியா விசயத்தில் தப்பாகிவிட்டது. ஆம்.. ஓவியா நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்டால், நிச்சயமாக டிஆர்பி பண்மடங்கு குறைந்து விஜய் டிவிக்கு பலத்த அடி இருக்க வாய்ப்பு இருக்கிறது.

உண்மை என்னவென்பது நாளை சனிக்கிழமை தான் தெரியவரும்.