Home கலை உலகம் பிக்பாஸ்: உடல் நலக் குறைவால் ஓவியா வெளியேறினார்

பிக்பாஸ்: உடல் நலக் குறைவால் ஓவியா வெளியேறினார்

1048
0
SHARE
Ad

oviya biggbosstamilசென்னை – நேற்று ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் உடல் நலக் குறைவால் பிரபல நடிகை ஓவியா பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் இல்லத்தில் நீண்ட காலத்திற்குத் தாக்குப் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஓவியா பாதியிலேயே வெளியேறியது இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இனி இந்த நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து இரசிகர்களின் ஆதரவு முன்பு போல கிடைக்குமா என்ற கேள்விக் குறியும் எழுந்துள்ளது.

பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேறிய ஓவியாவை பின்னர் கமல்ஹாசன் மேடையில் சந்தித்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

கமல்ஹாசனுடனான சந்திப்பின்போது பிக் பாஸ் பங்கேற்பாளர்களில் ஒருவரான ஆரவ்வைத் தான் காதலிப்பதாக ஓவியா கூறினார்.

ஓவியாவுடனான நேர்காணலை முடித்துக் கொண்ட கமல் பின்னர் பிக் பாஸ் வீட்டைச் சேர்ந்த ஒவ்வொருவராக  தனித் தனியாக அழைத்து அவர்களது கருத்துகளைக் கேட்டார்.

நேற்றைய நிகழ்ச்சியை முடித்தபோது, இந்த வாரம் ஒருவர் நிகழ்ச்சியிலிருந்து இரசிகர்களால் வெளியேற்றப்படுவார் என்றும் கமல் அறிவித்தார்.

இந்த சம்பவங்களை இன்று சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கு அஸ்ட்ரோ 224 அலைவரிசையில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரசிகர்கள் காணலாம்.

-செல்லியல் தொகுப்பு