Home நாடு பினாங்கு இந்து அறவாரியத் தலைவராக மீண்டும் இராமசாமி!

பினாங்கு இந்து அறவாரியத் தலைவராக மீண்டும் இராமசாமி!

1028
0
SHARE
Ad

penang-lim guan eng-hindu endowment board-05082017ஜோர்ஜ் டவுன் – பினாங்கு இந்து அறவாரியத் தலைவராக மாநிலத் துணையமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமியை முதலமைச்சர் லிம் குவான் எங் மீண்டும் நியமித்திருக்கிறார்.

இராமசாமி உள்ளிட்ட மொத்தம் 11 பேரை இந்து அறவாரியக் குழு உறுப்பினர்களாக லிம் குவான் நியமித்திருக்கிறார். அவர்களுக்கான பதவி நியமனக் கடிதங்களை வெள்ளிக்கிழமை (4 ஆகஸ்ட் 2017) தனது அலுவலகத்தில் லிம் குவான் எங் வழங்கினார்.

penang-hindu endowment -appointed-05082017லிம் குவான் எங்குடன் நியமனம் பெற்ற இந்து அறவாரியத்தின் 2017/2018ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினர்கள்

#TamilSchoolmychoice

2017/2018ஆம் தவணைக்கான இந்து அறவாரிய உறுப்பினர்கள் பின்வருமாறு:-

  1. டாக்டர் பி.இராமசாமி (தலைவர்)
  2. ஏ.தனசேகரன் (துணைத் தலைவர்)
  3. சுரேந்திரன் இராமதாஸ் (செயலாளர்)
  4. நேதாஜி ராயர்
  5. டத்தோ சுந்தரராஜூ சோமு
  6. டத்தோ முரளிதரன் நவரத்னம்
  7. டத்தோ குவனராஜூ பச்சையப்பன்
  8. டாக்டர் சங்கர் சம்பந்தமூர்த்தி
  9. ஜூகல் கிஷோர் ஷிவ்லால்
  10. காளியப்பன் ரங்கநாதன்
  11. கிருஷ்ணசாமி

penang-hindu endowment-ramasamy appointed-05082017பினாங்கு துணை முதல்வர் இராமசாமியிடம் பினாங்கு அறவாரியத் தலைவர் பதவி நியமனத்திற்கான கடிதத்தை வழங்குகிறார்…

படங்கள்: நன்றி – லிம் குவான் மற்றும் டாக்டர் பி.இராமசாமி முகநூல் பக்கங்கள்