Home வணிகம்/தொழில் நுட்பம் இணைய வர்த்தகத்தைத் தொடங்க மைடின் முடிவு!

இணைய வர்த்தகத்தைத் தொடங்க மைடின் முடிவு!

845
0
SHARE
Ad

mydin-franchise-business-opportunityகோலாலம்பூர் – மலேசியாவின் மிகப் பெரிய பேரங்காடியான மைடின், தனது வர்த்தகத்தை இணையத்தில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருக்கிறது.

இது குறித்து மைடின் நிர்வாக இயக்குநர் டத்தோ வீரா டாக்டர் அமீர் அலி மைடின் கூறுகையில், சரியான நேரத்தில் அதனை அறிமுகம் செய்யக் காத்திருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

“தற்போது, சந்தை மிகவும் பலவீனமாக இருக்கின்றது. எனவே இணையத்தில் வர்த்தகத்தை அறிமுகம் செய்ய காத்திருக்கிறோம்.”

#TamilSchoolmychoice

“இணைய வர்த்தகம் என்பது சற்று வேறுவிதமானது. இந்த டிஜிட்டல் உலகில் அதில் விளையாட மிகப் பெரிய ஆட்கள் இருக்கிறார்கள். எனவே நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.