திருவனந்தபுரம் – நெல்லையைச் சேர்ந்த முருகன் என்பவர் கேரள மாநிலம் கொல்லத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு தனது நண்பருடன் மோட்டாரில் சென்று கொண்டிருந்த போது நடந்த விபத்தில், முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனிடையே, முருகனை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சுவாசக் கருவிகள் இல்லை என்று கூறி முருகனை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், அங்கிருந்து 4 தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்ற போது, யாரும் சிகிச்சையளிக்க மறுத்ததால், முருகன் அவசர ஊர்தியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், கேரளா மனித உரிமை ஆணையம் இந்த விவகாரத்தை விசாரணை செய்து வருகின்றது.
மேலும், கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், உரிய நேரத்தில் முருகனுக்குச் சிகிச்சையளிக்கத் தவறிய 5 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்.