Home One Line P1 அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது, பொதுமக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை!

அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது, பொதுமக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை!

482
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை முதல் நாட்டில் பீதியால் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கும் அலை அதிகமானதை அடுத்து, மைடின் பல்பொருள் அங்காடி விற்பனை மையத்தின் உரிமையாளர் மலேசியர்கள் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக இருப்பதால் பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்று மைடின் முகமட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்டின் நிர்வாக இயக்குனர் அமீர் அலி மைடின் கூறினார்.

“பீதியடைய வேண்டாம். எங்கள் உற்பத்தியாளர்கள் பொருட்கள் இன்னும் நல்ல நிலையில் இருப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார்கள்.”

#TamilSchoolmychoice

“ஒருவருக்கொருவர் கருத்தில் கொள்வோம்.”

“நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மலேசியர்களாக நாம் ஒன்றுபட்டால் மட்டுமே நாம் பலப்படுவோம். அமைதியாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்” என்று அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

கொவிட் -19 பாதிப்பைத் தடுக்க அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் என்ற அச்சத்துடன் நேற்று பீதியடைந்த மக்கள் பொருட்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர்.

இருப்பினும், நேற்று இரவு பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்ததை அடுத்து, சில்லறை கடைகள் திறந்த நிலையில் இருக்கும், மேலும் இது நாளை முதல் நடைமுறைக்கு வரும் இயக்கக் கட்டுப்பாட்டு ஆணையால் பாதிக்கப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.