கோலாலம்பூர்: ஒவ்வொரு நாளும் சிங்கப்பூருக்கு வேலைக்காக பயணம் செய்யும் மலேசியர்கள், நாளை புதன்கிழமை முதல் மார்ச் 31 வரை இனி அவ்வாறு செய்ய முடியாது என்று குடிநுழைவுத் துறை இயக்குநர் கைருல் சைமி டாவுட் உறுதிப்படுத்தியுள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பற்றி பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்ததைத் தொடர்ந்து, இது நடைமுறைக்கு வந்துள்ளது.
“நாளை முதல் மார்ச் 31 வரை இது அனுமதிக்கப்படாது” என்று கைருல் மலேசியாகினியிடம் கூறினார்.
இதே தடை தாய்லாந்திற்கு தினமும் பயணம் செய்பவர்களுக்கும் பொருந்தும் என்று கைருல் கூறினார்.
ஜோகூரில் வசிக்கும் மலேசியர்கள் மற்றும் சிங்கப்பூரில் பணிப் புரிவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இந்த விளக்கம் அளித்தார்.