Home கலை உலகம் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – தொடர் இரண்டில் கமல்ஹாசன்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி – தொடர் இரண்டில் கமல்ஹாசன்

605
0
SHARE
Ad

kamalhassan-oru-kodi

சென்னை, மார்ச் 25- விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்று பிரகாஷ்ராஜ் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

மிகவும் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் போய்க்கொண்டிருக்கிறது விஜய் டிவியில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி தொடர் 2.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சி இம்மாதம் 11ம் தேதி தொடங்கியது. நடிகர் பிரகாஷ்ராஜ் ரசிகர்களை கவரும் வகையில் தொகுத்து வழங்கிவருகிறார்.

பொதுமக்கள் மட்டுமே பங்கேற்று வந்த இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அதற்காக மார்ச் 23ம் தேதி சனிக்கிழமை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

இந்த தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் கமல். நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சியை நடிகர் சூர்யா தொகுத்து வழங்கியபோது கமல் மகள் ஸ்ருதி பங்கேற்றார்.

நடிகர் கமல் தொலைபேசி மூலம் மகளுக்கு உதவி செய்தார். தொடர் 2ல் கமலுக்கு அவரது மகள் தொலைபேசி மூலம் உதவி செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.