Home நாடு மகாதீர் கூட்டத்தில் கலவரம்: மேலும் 7 பேர் கைது‍!

மகாதீர் கூட்டத்தில் கலவரம்: மேலும் 7 பேர் கைது‍!

653
0
SHARE
Ad

Forumflaresகோலாலம்பூர் – கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது கலந்து கொண்ட ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற விவாதக் கூட்டத்தில், காலணி வீசியும், நாற்காலிகளை வீசியும் கலவரத்தில் ஈடுபட முயன்றதாக ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

20 முதல் 30 வயதிற்குட்ட அவர்கள் 7 பேரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக சிலாங்கூர் குற்றப்புலனாய்வுத் துறையின் மூத்த ஆணையர் ஃபாட்சில் அகமட் தெரிவித்தார்.