Home உலகம் பார்சிலோனாவில் பயங்கரவாதத் தாக்குதல் – 13 பேர் மரணம்!

பார்சிலோனாவில் பயங்கரவாதத் தாக்குதல் – 13 பேர் மரணம்!

761
0
SHARE
Ad

Breaking-News2பார்சிலோனா – ஸ்பெயின் நாட்டின் நகர்களில் ஒன்றான பார்சிலோனாவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் இதுவரை 13 பேர் மரணமடைந்திருப்பதோடு, 100 பேர் வரை காயமடைந்தனர்.

லா ரம்ப்லா எனப்படும் (Las Ramblas) சுற்றுப் பயணிகள் அதிகமாகக் கூடும் இடத்தில் வேன் போன்ற பெரிய வாகனம் ஒன்றைக் கொண்டு கூட்டத்தினரிடையே மோதி, இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இருவர் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் தாக்குதல் நடத்தியவர்கள் நாங்கள் ‘இஸ்லாமிய நாட்டின் போர்வீரர்கள்’ எனக் கூறியதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.