25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தன்னை விடுதலை செய்யும் படி, அரசாங்கத்திற்கு பல முறை அவர் கருணை மனு போட்டும், எந்த ஒரு பயனும் இல்லாத காரணத்தால், சமீப காலமாக ஆன்மீகத்தில் ஈடுபடத் தொடங்கினார் முருகன்.
நீண்ட முடியும், தாடியுமாக சாது போல் தோற்றத்திற்கு மாறிய முருகன், கடந்த சில நாட்களுக்கு முன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கோரிக்கை மனுவில், வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல், கடவுளை நினைத்து தியானத்தில் ஈடுபட்டு, சிறையிலேயே தான் ஜீவ சமாதி அடையப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி, நேற்று வெள்ளிக்கிழமை முதல் சிறையில் உணவு உண்ணாமல் முருகன் தியானத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.