Home நாடு கோர்ட்டுமலை விநாயகர் தங்க இரதம் – டாக்டர் சுப்ரா பார்வையிடுகிறார்!

கோர்ட்டுமலை விநாயகர் தங்க இரதம் – டாக்டர் சுப்ரா பார்வையிடுகிறார்!

1119
0
SHARE
Ad

subra-tamil patriot conf-24062017 (4)பத்துமலை – நாளை வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு பத்துமலை முருகன் ஆலயத்திலிருந்து வெள்ளோட்டம் விடப்படவிருக்கும் கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்தின் தங்க இரதத்தைப் பார்வையிட மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான, டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் காலை 7.00 மணிக்கு பத்துமலைத் திருத்தலத்திற்கு வருகை தரவிருக்கின்றார்.

golden chariot-kortumalaiதங்கரதம் பத்துமலையிலிருந்து கோர்ட்டுமலை விநாயகர் ஆலயம் நோக்கிப் புறப்படும் நிகழ்ச்சியில், ஏற்கனவே ஒப்புக் கொள்ளப்பட்ட வேறு நிகழ்ச்சிகளின் காரணமாக கலந்து கொள்ள இயலாது என்பதால், முன்கூட்டியே பத்துமலை திருத்தலத்திற்கு வருகை தந்து தங்க இரதத்தைப் பார்வையிடுவதோடு, தங்க இரதம் புறப்பாடு குறித்த நிகழ்ச்சிகளின் விவரங்களையும் நேரில் கண்டறிவார்.