Home நாடு டத்தோ ஹாஜி தஸ்லீம் காலமானார்!

டத்தோ ஹாஜி தஸ்லீம் காலமானார்!

1264
0
SHARE
Ad

datohajithasleemகோலாலம்பூர் – மலேசியாவில் பல்வேறு சமூக சேவைகளிலும், தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காகவும் தொண்டாற்றிக் கொண்டிருந்த சமூக சேவகர் டத்தோ ஹாஜி தஸ்லீம் உடல்நலக் குறைவால் இன்று புதன்கிழமை இரவு காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் நாளை வியாழக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு தாமான் துன் இஸ்மாயில் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இனம், மதம், அரசியல் கட்சி என்ற வித்தியாசங்களைக் கடந்து, தமிழ் மொழி, தமிழ்ப் பள்ளிகள், தமிழ்ப் பணிகள் என்று வரும்போது போராட்டக் களத்தில் முன் நின்ற அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் செல்லியல் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.