கோலாலம்பூர் – 1எம்டிபி தொடர்பான அரசாங்க ஆவணங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ் நீதிமன்றம்) பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லிக்கு, அதிகாரத்துவ இரகசிய சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட 18 மாத சிறைத் தண்டனையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உறுதிப் படுத்தியது.
எனினும் அவருக்கு எதிரான மற்றொரு குற்றச்சாட்டை உயர் நீதிமன்றம் இரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ரபிசி தெரிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்காலத் தடையையும் நீதிமன்றம் வழங்கியது.
அரசாங்கத் தலைமைக் கணக்காய்வாளரின் 1எம்டிபி தொடர்பான அறிக்கையைத் தன் கைவசம் வைத்திருந்து விநியோகித்தார் என ரபிசி மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தை விநியோகித்த குற்றத்திற்கு தண்டனை விதிக்கப்பட்ட ரபிசி, அந்த ஆவணத்தைத் தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.