Home கலை உலகம் ராகாவின் ஸ்டார் மகுடத்தை வெல்ல போவது யார்?

ராகாவின் ஸ்டார் மகுடத்தை வெல்ல போவது யார்?

833
0
SHARE
Ad

Raagavin Star Finalistகோலாலம்பூர் – திறமையான பாடகர்களைக் கண்டறியும் முயற்சியில் டிஎச்ஆர் ராகா வானொலி நிலையத்தின் ஏற்பாட்டில் ராகாவின் ஸ்டார் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு 5 போட்டியாளர்கள் தேர்வாகியிருக்கிறார்கள்.

அண்மையில், இன்ஸ்டாகிராம் வாயிலாக நடைபெற்ற குரல் தேடலில் 1000-க்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. அவற்றுள் சிறந்த 10 பேரை, நியமிக்கப்பட்ட நடுவர் குழு தேர்தெடுத்தனர். பிறகு, தேர்தெடுக்கப்பட்ட 10 காணொளிகளும் நேயர்கள் வாக்களிக்க டிஎச்ஆர் ராகாவின் அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இன்று ஆகஸ்ட் 26-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறவுள்ள ராகாவின் ஸ்டார் போட்டியின் இறுதிச் சுற்றில் அருள்வேந்தன் மனோகரன், நிமலன் கிருஷ்ணன், சபேஷ் மன்மதன், அணு ரஞ்சினி அன்பழகன் மற்றும் திவேஸ் தியாகராஜா ஆகியோர் களமிறங்குகின்றார்கள்.

#TamilSchoolmychoice

Music Composersஅதிக வாக்குகள் பெற்ற இந்த 5 போட்டியாளர்கள், 5 மலேசிய உள்ளூர் இசையமைப்பாளர்களுடன் இணைந்து 5 நாட்களில் ஒரு பாடலை உருவாக்கும் பணி வழங்கப்பட்டது. அந்த வகையில் ஜெய், லாரன்ஸ் சூசை, டி.ஜே. கன், சுந்தரா மற்றும் ஜித்திஸ் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட போட்டியாளருடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

இப்போட்டியின் முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்களுக்கு 3,000 ரிங்கட், 2,000 ரிங்கிட் மற்றும் 1,000 ரிங்கிட் ரொக்கம் முறையே தட்டிச் செல்லும் அரிய வாய்ப்புக் காத்து கொண்டிருக்கின்றது.

அதுமட்டுமின்றி, இறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெறும் முதல் 5 போட்டியாளர்கள் எதிர்வரும் செப்டம்பர் 24-ம் தேதி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெறவிருக்கும் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் டிஎச்ஆர் ராகா கலைநிகழ்ச்சியின் போது பாடும் வாய்ப்பும் வழங்கப்படவிருக்கிறது.

மேல் விவரங்களை raaga.fm அகப்பக்கத்தில் அறிந்து கொள்ளலாம்.