Home நாடு செப்டம்பர் 4-ல் புதிய ஐஜிபி அறிவிப்பு: துணைப் பிரதமர்

செப்டம்பர் 4-ல் புதிய ஐஜிபி அறிவிப்பு: துணைப் பிரதமர்

998
0
SHARE
Ad

zahidகோலாலம்பூர் – நடப்பு தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கருக்கு, வரும் செப்டம்பர் 5-ம் தேதியோடு 60 வயது நிறைவடைவதால், அவர் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இதனையடுத்து, காலிட்டுப் பதிலாக புதிய ஐஜிபியாக பொறுப்பேற்பவரின் பெயர் வரும் செப்டம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்படும் என துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.

காலிட் இன்னும் சில ஆண்டுகள் பணியாற்ற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், ஆனால் காலிட் அதனை மறுத்துவிட்டதாகவும் சாஹிட் குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

எனவே காலிட்டின் முடிவுக்கு மரியாதை அளித்து, புதிய ஐஜிபியை தேர்வு செய்ய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், பேரரசருடன் கலந்தாலோசித்து வருவதாகவும் சாஹிட் தெரிவித்திருக்கிறார்.