Home உலகம் தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங் லக் தப்பித்து துபாய் சென்றார்!

தாய்லாந்து முன்னாள் பிரதமர் இங் லக் தப்பித்து துபாய் சென்றார்!

846
0
SHARE
Ad

ying luck shinawatra-featureபேங்காக் – தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் இங் லக் ஷினவத்ரா தனக்கு எதிரான வழக்கொன்றில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு இரண்டு நாட்கள் இருக்கும் நிலையில், நாட்டிலிருந்து தப்பித்து வெளியேறி விட்டார் என்றும் தற்போது துபாய் நாட்டில் பாதுகாப்பாகவும், நலமுடனும் இருக்கிறார் என்றும் சிஎன்என் வெளியிட்ட செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது.

முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் தங்கையான இங் லக் மீது அரிசி விநியோகம் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டு, விசாரணைகள் முடிந்த நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் அந்த வழக்கின் தீர்ப்பு வெளியிடப்பட இருந்தது.

சட்டத்தை மீறி, இங் லக் நாட்டிலிருந்து வெளியேறியிருப்பதால், அவருக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்து அந்த வழக்கின் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமரும் இங் லக்கின் மூத்த சகோதரருமான தக்சின் ஷினவத்ராவும், ஏற்கனவே தாய்லாந்து நாட்டிலிருந்து வெளியேறி, துபாய் மற்றும் பிரிட்டனில் நாடு கடந்து வாழ்ந்து வருகிறார்.