Home இந்தியா மோடி அமைச்சரவையில் 9 புதிய அமைச்சர்கள்!

மோடி அமைச்சரவையில் 9 புதிய அமைச்சர்கள்!

813
0
SHARE
Ad

narendra-modiபுதுடில்லி – 2014-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜகவின் சார்பில் ஆட்சி அமைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாண்டு பதவிக் காலத்தில் முதன் முறையாக தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றங்களை இன்று ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்கிறார்.

இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்நோக்கவிருக்கும் மோடி, 9 புதிய அமைச்சர்களை தனது அமைச்சரவைக்குள் இணைத்துள்ளார். அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரப்படி, 10.00 மணிக்கு பதவியேற்கவிருக்கின்றனர்.

அதற்கு முன்பாக மோடியுடன் அவர்கள் காலை உணவுடன் சந்திப்பு ஒன்றை நடத்துகின்றனர்.

#TamilSchoolmychoice

இந்திய ஊடகங்கள் அந்த அமைச்சர்கள் யார் என ஆரூடங்கள் வெளியிட்டு வந்தாலும், புதிய அமைச்சரவையின் அதிகாரத்துவ பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. யாருக்கு எந்த இலாகா எந்த விவரமும் குறிப்பிடப்படவில்லை.