Home கலை உலகம் ‘எம்ஜிஆர் 100’ கண்காட்சி – ரசிகர்களுக்கு அழைப்பு!

‘எம்ஜிஆர் 100’ கண்காட்சி – ரசிகர்களுக்கு அழைப்பு!

1403
0
SHARE
Ad

MGRகோலாலம்பூர் – ‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் அவதரித்து நூறாண்டுகள் பூர்த்தியடைந்துவிட்டது. இப்பெருமகனார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்த போதிலும், பெருமக்களின் மனங்களில் இன்னும் நீக்கமற வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சீர்மிகு வாழ்க்கை நெறிமுறைகளுக்கு ஓர் உதாரணப் புருஷராக வாழ்ந்துக் காட்டியவரை, புதிய தலைமுறையினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கோடு ‘எம்ஜிஆர் அனைத்துலக மாநாடு & நூற்றாண்டு விழா’ தலைநகரில் நடத்தப்படுகிறது.

SP Manivasagam(1)மலேசிய இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத்தின் (MICAS) தலைவர் எஸ்.பி.மணிவாசகம் தலைமையிலான தொண்டார்வளர் குழு, இந்த அரிய முயற்சியை முன்னெடுத்திருக்கிறது. மலாயாப் பல்கலைக்கழக துங்கு வேந்தர் அரங்கில், செப்டம்பர் 10-ம் தேதியன்று காலை 8.30 மணி தொடங்கி இரவு 9.00 மணி வரை அனைத்துலக மாநாடு நடைபெறுகிறது. இதற்கான நுழைவு முற்றிலும் இலவசம்!

#TamilSchoolmychoice

இதனை ஒட்டி, எம்ஜிஆரின் வாழ்க்கை குறிப்புகளையும் அரிய புகைப்படங்களையும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டு வரும் நோக்கில் செப்டம்பர் 4-ம் தேதி மாலை மணி 5.00-க்கு தலைநகர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மண்டபத்தில் ‘எம்ஜிஆர் 100’ சிறப்பு கண்காட்சி நடைபெறுகின்றது.

datuk_sahadevanமலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தியும் தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவனும் இக்கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பர். செப்டம்பர் 8-ம் தேதி வரை (ஐந்து  நாட்களுக்கு) மாலை மணி 5.00 முதல் இரவு மணி 9.00 வரை திறக்கப்பட்டிருக்கும் இக்கண்காட்சிக்கு, பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.

இதற்கிடையில், செப்டம்பர் 7-ம் தேதியன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஒட்டிய சிறப்பு தபால் தலையும் டான்ஸ்ரீ சோமா மண்டபத்தில் வெளியிடப்படுகின்றது.

செப்டம்பர் 8-ம் தேதி மாலை வேளையில் பிரிக்பீல்ட்ஸ் வணிகச் சந்தைப் பகுதியில் எம்ஜிஆர் அனைத்துலக மாநாடு ஒட்டிய பிரச்சார நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.

இலாப நோக்கமின்றி, பொதுநலச் சிந்தனையோடு முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகின்ற மேற்குறிப்பிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் எம்ஜிஆர் பற்றாளர்களும், ரசிகர் பெருமக்களும், புதிய தலைமுறையினரும் கலந்து கொண்டு ஆதரவளிக்குமாறு எஸ்.பி. மணிவாசகம் கேட்டுக் கொண்டார்.

தொடர்புக்கு: 012-2123960, எஸ்.பி.மணிவாசகம், 012-2261944 சோலை பாஸ்கரன், 012-3056799 கரு.பன்னீர்செல்வம்.

இணையத்தள அகப்பக்கம் : http://mgrmicasglobal.com/

இணையத்தள எம்ஜிஆர் டிவி : http://www.drmgr.tv/

பேஸ்புக் : MGR100Malaysia