Home இந்தியா மோடியின் புதிய 4 முழு அமைச்சர்கள் – 9 இணை அமைச்சர்கள் – நிர்மலா சீத்தாராமன்...

மோடியின் புதிய 4 முழு அமைச்சர்கள் – 9 இணை அமைச்சர்கள் – நிர்மலா சீத்தாராமன் அமைச்சரானார்!

1418
0
SHARE
Ad

nirmala seetharaman-featureபுதுடில்லி – (மலேசிய நேரம் பிற்பகல் 2.00 மணி நிலவரம்)

4 முழு அமைச்சர்கள் (காபினெட்)

  • தர்மேந்திரா பிரதான் காபினெட் அமைச்சர் பெட்ரோலியம் அமைச்சர்
  • பியூஷ் கோயல், ரயில்வே துறை அமைச்சர், உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பங்காற்றியவர்
  • நிர்மலா சீத்தாராமன், தமிழிலும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் சரளமாக உரையாடும் – விவாதிக்கும் வல்லமை பெற்ற தமிழர்.
  • முக்தா அப்பாஸ் நக்வி, பாஜக அமைச்சமுஸ்லீம் அமைச்சரான இவர் முத்தலாக் விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர்.

9 இணை அமைச்சர்கள் (யூனியன் அமைச்சர்கள்)

  • ஷிவ் பிரதாப் ஷூக்லா, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்
  • வீரேந்திர குமார், மக்களவை உறுப்பினரான இவர், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். தலித் சமூகத்தின் அமைச்சரவைப் பிரதிநிதியாக இவர் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.
  • ஆனந்த் குமார் ஹெக்டே, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். விரைவில் நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுபவர். தேகுவாண்டோ தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்றவர். ஐந்து முறை மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
  • ஆர்.கே.சிங் – முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி. 1975-ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர். முன்னாள் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளராக இருந்தவர்.
  • ஹர்டிப் சிங் புரி – முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர். வெளியுறவுக் கொள்கைகளில் நிபுணத்துவம் வாய்ந்தவர். 1974-ஆம் ஆண்டின் வெளியுறவுத் துறை அதிகாரியாக அரசு சேவையில் நுழைந்தவர்.
  • கஜேந்திர சிங் – ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். முன்னாள் கூடைப்பந்து விளையாட்டாளர்.
  • அஸ்வினி குமார் சொபே, பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
  • அல்போன்ஸ் கண்ணாந்தனம், கேரளாவைச் சேர்ந்த இவர் முன்னாள் ஐஏஸ் அதிகாரி. 1079-ஆம் ஆண்டின் ஐஏஎஸ் அதிகாரிகள் பட்டியலில் அரசு சேவையைத் தொடங்கியவர்.
  • டாக்டர் சத்யபால் சிங் – மும்பை காவல் துறையின் முன்னாள் கமிஷனர். ஐபிஎஸ் அதிகாரியான இவர் மும்பையில் குற்றங்களைத் துடைத்தொழிப்பதில் முக்கியப் பங்காற்றி அதன் மூலம் பிரபலமானவர். சில நூல்களும் எழுதியிருக்கிறார்.