Home உலகம் ஆபாசப் புகைப்படம்: வில்லியம்- கேத் தம்பதிக்கு 1 லட்சம் யூரோ நஷ்ட ஈடு!

ஆபாசப் புகைப்படம்: வில்லியம்- கேத் தம்பதிக்கு 1 லட்சம் யூரோ நஷ்ட ஈடு!

915
0
SHARE
Ad

prince_william_kate_middletonலண்டன் – இங்கிலாந்து இளவரசர் வில்லியமும், அவரது மனைவி கேத் மிடில்டனும், தீவு ஒன்றிற்குச் சுற்றுலா சென்றிருந்த போது, கடற்கரையில் சூரியக் குளியலில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதனைத் தொலைதூர லென்ஸ் மூலம் ஆபாசமாகப் படம் பிடித்த பிரஞ்சு பத்திரிகை ஒன்று தனது இதழில் அட்டைப்படமாக வெளியிட்டது.

கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்தில், அந்தப் பிரஞ்சு பத்திரிகை மீது இளவரசர் வில்லியம் – கேத் தம்பதி சார்பில் மானநஷ்ட வழக்குத் தொடரப்பட்டது.

இந்நிலையில், இன்று புதன்கிழமை வெளியான் அதன் இறுதித் தீர்ப்பில், சம்பந்தப்பட்ட பத்திரிக்கை இளவரசர் வில்லியமுக்கும், அவரது மனைவி கேத்துக்கும் தலா 50,000 யூரோ என மொத்தம் 100,000 யூரோ (மலேசிய மதிப்பில் ஏறக்குறைய 5 லட்சம் ரிங்கிட்) நஷ்ட ஈடாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice