சிங்கப்பூர் – மிக முக்கியமான காரணங்களைத் தவிர மற்றவைகளுக்காக வடகொரியா செல்வதைத் தவிர்க்கும் படி, சிங்கப்பூரர்களுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சின் பயண ஆலோசனைக்குழு வலியுறுத்தியிருக்கிறது.
வடகொரியாவில் சிங்கப்பூருக்கான தூதரகம் இல்லாத காரணத்தால், இங்கிருந்து அங்கு செல்லும் சிங்கப்பூரர்களுக்கு உதவி வேண்டுமெனில் ஏற்பாடு செய்வது மிகவும் கடினமான ஒன்று என்றும் சிங்கப்பூர் தெரிவித்திருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகொரியா தனது 6-வது அணு ஆயுதமான ஹைட்ரோஜென் வெடிகுண்டை சோதனை செய்து பார்த்ததையடுத்து, சிங்கப்பூர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.