மெக்சிகோ – தென் அமெரிக்க நாடான மெக்சிகோவின் தென் பகுதி கடற்கரையைத் தாக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஒரு நூற்றாண்டில் தென் மெக்சிகோ காணாத நிலநடுக்கம் இதுவென வர்ணிக்கப்படுகிறது.
8.1 ரிக்டர் புள்ளிகள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியிலும், குவாட்டாமாலாவிலும் உணரப்பட்டன.
பசிபிக் கடல் பகுதியில் இந்த நிலநடுக்கம் தோன்றியதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதே வேளையில் மெக்சிகோ நாட்டின் கிழக்குப் பகுதியில் ‘காத்தியா’ சுழற் காற்றின் தாக்கத்தால் கனத்த மழை பெய்து வருகிறது.