Home நாடு சிலாங்கூர் பக்காத்தான்: அஸ்மின் தலைவர் – சிவராசா துணைத் தலைவர்

சிலாங்கூர் பக்காத்தான்: அஸ்மின் தலைவர் – சிவராசா துணைத் தலைவர்

988
0
SHARE
Ad

azmin ali-feature-1ஷா ஆலாம் – 14-வது பொதுத் தேர்தலை நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருக்கும் எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி, இன்று வெள்ளிக்கிழமை தனது தலைமைத்துவ வரிசையை அறிவித்தது.

சிலாங்கூர் பக்காத்தானின் தலைவராக மாநில மந்திரி பெசாரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலி நியமிக்கப்பட்டுள்ளார். அவருடன் நான்கு துணைத் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசா அவர்களில் ஒருவராவார்.

Sivarasa-FEATUREபக்காத்தான் கூட்டணியில் இந்தியத் தலைவர்கள் போதுமான அளவில் இடம் பெறவில்லை என்ற குறைபாடுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் நிலையில் சிலாங்கூர் மாநில பக்காத்தான் அணியில் சிவராசா (படம்) இடம் பெற்றிருக்கிறார்.

#TamilSchoolmychoice

டோனி புவா (ஜசெக), இசாம் ஹாஷிம் (அமானா), டத்தோ அப்துல் ரஷிட் அசாரி (பிரிபூமி பெர்சாத்து கட்சி) ஆகிய மூவரும் மற்ற மூன்று துணைத் தலைவர்களாவர்.

அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினரும் பிகேஆர் கட்சியின் மகளிர் அணித் தலைவருமான சுரைடா கமாருடின் செயலாளராக நியமிக்கப்பட, அவருக்குத் துணையாக பிரிபூமி கட்சியின் கமருல் ஹிஷாம் பொறுப்பேற்கிறார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்ற அவைத் தலைவரும் சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினருமான ஹன்னா இயோ பொருளாளராக நியமனம் பெறுகிறார்.

xavier0723தேர்தல் இயக்குநராக சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சேவியர் ஜெயகுமார் (படம்) பொறுப்பேற்கிறார்.

பூச்சோங் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினரான கோபிந்த் சிங் டியோ சட்டப் பிரிவுத் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.

பாஸ் கட்சி இல்லாத பக்காத்தான் ஹரப்பான் அணி மீண்டும் சிலாங்கூர் மாநிலத்தை வெற்றி கொள்ளுமா என்பதுதான் தற்போது அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ள கேள்வி