மலேசிய வரலாற்றில் துன் விருது பெறும் இரண்டாவது இந்தியர் சாமிவேலு ஆவார். இதற்கு முன் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் துன் வீ.தி.சம்பந்தன் மட்டுமே துன் விருதைப் பெற்ற ஒரே இந்தியராகத் திகழ்ந்து வந்தார்.
81 வயதான துன் சாமிவேலு தனது அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகிய பின்னர் 2010 முதல் தெற்கு ஆசிய நாடுகளுக்கான சிறப்புத் தூதராகப் பணியாற்றி வருகிறார்.
துன் சாமிவேலுவுக்கு செல்லியல் குழுமம் சார்பில் எங்களின் இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.